Main Page | Home | Eelamclips | Gallery | Contact us | Forum | Live Radio

Kaanolikal

EHL - theyakie thilepan P1

EHL - theyakie thilepan P2

EHL - Theeyakath thee thilepan

EHL - padum paravaikal parunkal

 

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 3ம் நாள் இன்று

Thileepan 3rd day

இந்த  நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

அன்று இலங்கை அரசாங்கம் பாரத தேசத்தினை வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை ஓர் சூழ்ச்சிபொறிக்குள் தள்ளியதோ அவ்வாறுதான் இந்த ஆண்டிலும் சிங்கள அரசு, இந்திய அரசினை மட்டுமன்றி சர்வதேச நாடுகளையும் தனது பயங்கரவாதம் என்ற சூழ்ச்சி திட்டத்தில் சிக்குற செய்து எமது விடுதலை போராட்டத்தினை இக்கட்டான சிக்கலிற்குள் தள்ளி விட்டிருக்கின்றது சிங்கள பெளத்த பேரினவாதம். இந்த நிலையில் தியாகதீபத்தின் மூன்றாம் நாள் பயணத்தில் (19987 செப்டெம்பர் 17) முக்கியமான விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 17ம் திகதி. இது திலீபனுடன் 3ம் நாள்

தியாக தீபம் திலீபன்

3ம்நாள்

1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 17ம் திகதி இது திலீபனுடன் மூன்றாம் நாள் காலை ஆறு மணிக்கு துயில் எழும்பி திலீபனின் முகத்தை பார்த்த எனக்கு ஒரு கணம் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவன் உதடுகள் இரண்டும் பாளம் பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன. கண்கள் நேற்று இருந்ததை விட இன்னும் சற்று உள்ளே போயிருப்பதைப் போன்று தோன்றியது. முகம் வறண்டு காய்ந்து கிடந்தது. தலை குழம்பி இருந்தது. பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?இல்லை, வாஞ்சி அண்ண வேண்டாம் கலைந்திருந்த தலைமயிரை நானே அவர் முன் சென்று வாரிவிடுகிறேன் அவர் இன்னும் சிறு நீர் கழிக்கவில்லை வெளிக்கு போக வில்லையோ என்று மெதுவாக கேட்டேன். போகவேணும் போலதான் இருக்கு சரி கீழே இறங்கி வாங்கோ என்று கூறிவிட்டு மேடையை விட்டு நானே முதலில் இறங்கி கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன் வேண்டாம் விடுங்கோ நானே வருகிறேன் என்று என் கையை விலக்கி விட்டு தானே கீழே குதிக்கிறார் மனதை எவ்வளவு திடமாக வைத்திருக்கின்றார் என்று எனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டேன்.

 Thileepan 3rd day

மறைவிடத்திற்கு சென்ற அவர் சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார். ஐந்து நிமிடம் பத்து நிமிடம் பதினைந்து நிமிடம் இருபது நிமிடம் நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன ஆனால் எதுவித பயனும் ஏற்படவில்லை அவரைப்பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது என் கண்கள் என்னையறியாமலேயே கலங்குகின்றன மேடையில் வலப்புறத்தில் ஏறி அமர்ந்த திலீபன் தூரத்தில் தெரியும் வழக்கமான ஆட்களை அழைத்து  உரையாடத்தொடங்கினார். கண்டபடி  பேசினால் களைப்பு வரும் கொஞ்சம் பேச்சைக் குறையுங்கோ என்று அவரை தடுக்க முயன்றேன் ஆனால் என்னால் முடியவில்லை தனக்கே உரிய சிரிப்பை என்வார்த்தைகளுக்கு பதிலாக்கி விட்டு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். கடைசியாக அவர் தண்ணீர் அருந்தி நாற்பத்தைந்து மணித்தியாலயங்கள் முடிந்து விட்டன இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அவர் இப்படி தன்னைத்தானே வருத்திக்கொண்டு இருக்கப்போகிறார். இப்போதே சிறுநீர் கழிக்க முடியாமல் கஸ்டப்படத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு நாட்கள் போனால் என்னென்ன நடக்குமோ என்று எண்ணிய நான் அவரின் காதுக்குள் குசுகுசுத்தேன் என்ன பகிடியா பண்ணுகின்றீர்கள் ஒரு சொட்டுத் தண்ணீரும் குடிக்க மாட்டேன் என்ற நிபந்தனையுடன் தானே இந்த உண்ணாவிரதத்தை தொடங்கினனான் பிறகு எப்படி நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்பீர்கள் என்று ஆவேசத்துடன் என் மீது பாய்ந்தார்.

இல்லை இப்பவே உங்களுக்கு சலம் போறது நின்று போச்சு இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மேலும் மேலும்  கஸ்டமாக இருக்குமே அதற்காகத்தான் கேட்டனான் என்று அசடு வழிய கூறிவிட்டு வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டேன். இனிமேல் என்னை தண்ணீ குடிக்கச் சொல்லி கேட்க வேண்டாம் உண்ணாவிரதம் என்றால் என்ன தண்ணீர் குளுக்கோஸ் இளநீர் எல்லாமே உணவு தான் இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம் ஆனால் அது உண்ணாவிரதம் இல்லை உண்ணாவிரதம் என்றால் அதற்கு அர்த்தம் வேணும் ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான் எங்களை நாங்களே வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது இது வெறும் அரசியல் இலாபத்திற்காக தொடங்கப்பட்டதல்ல வயிறு முட்ட குடித்து விட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது அவரின் பேச்சிலிருந்த உண்மைகள் எனக்கும் தெரியும் ஆனால் திலீபனின் உயிர் மிகவும் பெறுமதி மிக்கது.

அதை எப்படி வருந்த விடுவது என்ற ஏக்கத்தில் தான் நான் அப்படிக்கேட்டேன். ஆனால் அவர் தன் உயர்ந்த சிந்தனையால் என் பேச்சுக்கு ஆப்பு வைத்துவிட்டார்.  நேரம் செல்ல செல்ல நல்லுர் ஆலய மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கடந்த இரு நாட்களாக ஆயிரக்கணக்காக வந்திருந்த சனக்கூட்டம் இன்று இலட்சத்தை தாண்டியிருந்தது யாழ்ப்பாண நகரத்திலுள்ள கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் காலை ஒன்பது மணிமுதல் வரிசைவரிசையாக வெள்ளைச்சீருடையில் அணிவகுத்து வந்து மைதானத்தை நிறைக்கத் தொடங்கினர். திலீபன் தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கத்தவர் என்ற நினைப்பு விடுபட்டு தமிழினத்தின் பிரதிநிதி என்ற எண்ணம் தான் சனக்கூட்டத்தின் மத்தியில் நிறைகிறது ஒலிபெருக்கியில் காசிஆனந்தனின் கவிதை ஒன்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தது. திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்னவயதில் இது தேவையா? மூன்றாம் நாளான இன்று இரண்டாவது மேடையில் சூடான பேச்சுக்களும் கண்ணீர்க் கவிதைகளும் முழங்கிக் கொண்டிருந்தன. பேச்சாளர்களில் ஒருவரும் எமது தீவிர ஆதரவாளருமான காங்கேசன்துறை கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்கள் பேசினார் தியாகி திலீபனின் உயிர் விலைமதிப்பற்றது அவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மட்டும் உரியவர் அல்ல அவர் தமிழினத்திற்கே சொந்தமானவர் அப்படிப்பட்ட திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீராவது அருந்தி தன் உடலைக் காப்பாற்ற வேண்டும் அவர் தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி நீர் உணவு அருந்தி எம் கவலையை போக்கவேண்டும் இது எனது வேண்டுகோள் மட்டும் அல்ல இங்கே வந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளும் இதுதான் இந்தப்பேச்சைக்கேட்ட திலீபனின் முகம் வாடியதை நான் அவதானித்தேன்.

தான் பேசப்போவதாக கூறினார் அவரிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தேன் இந்த மேடையில் பேசிய ஓர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப்படுத்துவது போல இருக்கிறது நான் இந்த மேடையில் நீராகாரம் ஏதும் எடுக்காமல்தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன் இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன்.நீங்கள் இந்த திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால் தயவு செய்து இனிமேல் என்னை யாரும்  நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம் உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கவே மாட்டேன். அவர் பேசி முடித்ததும் கனமாக பெய்து கொண்டிருந்த மழையும் ஓய்ந்து விட்டது. அன்றிரவு திலீபன் சிறுநீர் கழிக்க முடியாமல்  மிகவும் அவஸ்தைப்பட்டார் வைத்தியர் ஒருவரை அழைத்துவந்து அவரை பரிசோதிக்க ஏற்பாடு செய்தோம் ஆனால் திலீபன் அதை மறுத்துவிட்டார். எந்தவித பரிசோதனையும் சிகிச்சையும் தான்  இறக்கும் வரை தனக்கு அளிக்கக்கூடாது என அவர் உறுதியாக கூறிவிட்டார் அன்றிரவு அவர் கஸ்டப்பட்டு உறங்கும் போது நள்ளிரவு ஒரு மணி. அவரின் நாடித்துடிப்பு குறைந்திருந்தது.
ehs; 1 ehs; 2 ehs; 3 ehs; 4
ehs; 5 ehs; 6 ehs; 7 ehs; 8
ehs; 9 ehs; 10 ehs; 11 ehs; 12
       
 

copyright 2012 @ EelamHomeLand.Com | Web Design by Tamil Elilan | admin@eelamhomeland.com