Main Page | Home | Eelamclips | Gallery | Contact us | Forum | Live Radio

Kaanolikal

EHL - theyakie thilepan P1

EHL - theyakie thilepan P2

EHL - Theeyakath thee thilepan

EHL - padum paravaikal parunkal

 

திலீபனின் இறுதிப்பயணத்தின் பத்தாம் நாள்

1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 24ம் திகதி இது திலீபனின் இறுதிப்பயணத்தின் பத்தாம் நாள் பெற்றோர் பிள்ளைகள் சகோதரர் உற்றார் உறவினர் நண்பர்கள் இவர்களில் யாராவது நம் கண்முன்னாலேயே இறக்க நேரிடும் போது மனம் துன்பத்தில் முழ்கி விடுகிறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது ஆனால் இவர்களில் ஒருவர் அணுவணுவாக செத்துக்கொண்டிருப்பதை பார்க்கும் போது துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகிறோம்.

 

உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும் கண்களில் அழுவதற்கு கூட கண்ணீர் எஞ்சியிருக்காது ஆனால் இவர்கள் ஒருவர் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் பத்து நாட்களாக கண் முன்னால் அணுவணுவாக சாவின் விளிம்பில் நின்று தத்தளிப்பதை பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மனவேதனை இருக்கிறதே அப்பப்பா அதை வாய்விட்டுச் சொல்லமுடியாது அத்துணை கொடுமை அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அது அதை நான் என் வாழ்நாளில் முதல் முறையாக அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

இதையெல்லாம் என் கண்களால் முன்பே பார்க்க வேண்டும் என்று  தெரிந்திருந்தால் நான் திலீபன் இருந்த பக்கமே தலைவைத்துப் படுத்திருக்க மாட்டேன். நான் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான் இந்தியா ஒரு பழம்பெருமை மிக்க ஒரு ஜனநாயக நாடு காந்தி பிறந்த பொன்னான பூமி அகிம்சையைப் பற்றியும் உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில் பெருமைப் படக்கூடிய அளவிற்கு காந்தியடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு அப்படிப்பட்ட ஒரு நாட்டிடம் நீதி கேட்டு அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன் உண்மையிலேயே பாக்கியசாலி தான் ஏனெனில் மற்றவ்ர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஓர் நல்லவழியைக்காட்டத் தான் செய்யும்  அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாவது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது என்ற எண்ணத்தில் தான் ஓடிக்கொண்டு இந்த தியாக வேள்வியி்ல என்னால் முடிந்த பங்கைச் செலுத்த நான் தயாரானேன்.

நான் நினைத்ததெல்லாம் இவ்வளவு விரைவில் மாயமாகிவிடும் என்று நான் கனவு கூடக் கண்டிருக்கவில்லை எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தப்பு  இன்றைய நிலையில் திலீபன் இருந்ததைப் பார்த்த போது நம்பிக்கையே அற்றுவிட்டது இனி ஒரு நல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா?  என்று நான் சிந்தனை செய்து கொண்டிருந்தேன் அப்படியிருக்க கடவுளே மனித தர்மத்திற்கு கிடைக்கப் போகும் பரிசு இதுதானா திலீபனைக்கொல்வதற்கு அவர்கள் திடமானம் பூண்டு விட்டனர் என்பது புரிந்து விட்டது நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இயக்கப்போராளிகள் கூடியிருந்த இடம் ஒன்றில் இன்று மாலை வசாவிளான் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை தூக்குக்காவடியுடன் அழுதழுது வந்திருந்தார் வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக மற்றும் சாவகச்சேரி கொடிகாமம் எழுதுமட்டுவாழ் போன்ற இடங்களில் எல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது.

பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச்சேர்ந்த சுமார் ஆறாயிரம் மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லூர்  மைதானத்தை நிறைத்தனர் நாவாந்துறையைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம் தான் அறியமுடிந்தது.  முல்லைத்தீவு மாவட்டம் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும் நடக்காத இடமே இல்லையென்று கூறிவிடலாம் திலீபன் என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள் மன்னிக்கவும் இலட்சம் அல்ல கோடி தமிழ் நாட்டிலும் ஏன் ஏனைய ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.
ehs; 1 ehs; 2 ehs; 3 ehs; 4
ehs; 5 ehs; 6 ehs; 7 ehs; 8
ehs; 9 ehs; 10 ehs; 11 ehs; 12
       
 

copyright 2012 @ EelamHomeLand.Com | Web Design by Tamil Elilan | admin@eelamhomeland.com