Post Reply 
 
Thread Rating:
  • 0 Votes - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ கட்டமைப்புக்கள்
12-06-2011, 08:14 AM
Post: #1
தமிழீழ கட்டமைப்புக்கள்
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு

[Image: makalir.jpg]

1984 இன் ஆரம்பப்பகுதியில் முதன் முதலாக பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் மறைமுகமாக ஆதரவு நல்கத் தொடங்கியவர்கள் பின்பு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியுடன் ஆயுதப்பயிற்சி பெற்று இந்திய – தமிழீழப் போர் 1987 ஐப்பசி 10 இல் ஆரம்பமாகிய போது நேரடியாக யுத்தமுனைக்குச் சென்று பல வீர சாதனைகளை இன்றுவரை படைத்து வருகிறார்கள்.

விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்புக் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தெரிவிக்கையில், ‘எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசிய போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்துதான் எமது இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப் படுத்தியது. பெண்களை அரசியல் மயப்படுத்தி போராட்டத்திற்கு அவர்களை அணி திரட்டியது. இவ்வகையில் நாம் தமிழீழப் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தி இருக்கிறோம்.

தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கிறது. காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழீழப் பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது. சீருடை தரித்து நிற்கிறது. காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து, எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலையுணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை எமது பெண் போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்” என்றார்.

விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைய தலைமுறையினரின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆகவே இளைய தலைமுறையினர் அறிவுள்ளவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக, பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டியது ஒரு கட்டாயத் தேவை. எனவே அதற்கேற்ற வகையில் இளஞ்சிறார்களுக்குக் கல்வி ஊட்டப்பட வேண்டியதும் மிக முக்கியமான தொன்றாகிறது. ஆகவேதான் எமது தேச மாணவர்களின் நலன் கருதி, தமிழீழத் தேசியத் தலைவரின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் ‘விடுதலைப்புலிகள் மாணவர் அமைப்பு”.

கடற்புலிகள்

[Image: seatiger.jpg]

எமது ஆயுதப் போராட்டம் கடந்து வந்த ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் தமிழீழக் கடல் மிகப்பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது. 1984ம் ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின், கடற்புலிகள் படைப்பிரிவிற்கு அதன் வரலாற்று ரீதியான பிறப்பைக் கொடுத்து, ஆரம்பத்தில் அதற்கு ~கடற்புலிகள்~ என்ற பெயர் சூட்டினார். சுpறீலங்காக் கடற்படைக்குச் சவால்விடும் அளவிற்கு, விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி இன்று வளர்ந்துள்ளது. இவ்வமைப்பில் ஆண் போராளிகளின் அணியுடன், கடற்புலிகள் மகளிர் படை அணி 01-03-1992 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஆண்களின் பங்களிப்புக்குச் சமமான தமது பங்களிப்பை ஆற்றி சாதனை படைத்து வருகின்றனர்.

வான்புலிகள்

[Image: skytiger1.jpg]

[Image: skytiger2.jpg]

கரும்புலிகள்

[Image: karumpuli.jpg]

கரும்புலிகள் இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்

கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு 1993 ஆடி 5இல் தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையில், ‘கப்டன் மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பம் ஆகியது. என்றுமே உலகம் கண்டிராத, எண்ணிப் பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது. கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அப+ர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் ஆழமான மனித நேயம் படைத்தவர்கள். கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோ திடத்திற்கும், உறுதிப்பாட்டிற்குமே நாம் குறிப்பிடுகின்றோம்.

இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத பூடகமான இரகசியத் தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே கரும்புலி என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும். ஆழமான படிவமாக அமையப் பெற்றிருக்கிறது.

இந்த இரகசியத் தன்மை கரும்புலிகளின் செயற்பாட்டு வெற்றிக்கு மூலதாரமானது. இது கருப்புலிகளின் சகாப்தம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும். சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள்”, என்று தெரிவித்தார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

1985 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தேவைபற்றி தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் குறிப்பிடும் போது ‘தமிழீழ மக்கள் இரு போர் முனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து மண்மீட்கும் போர்முனை, மற்றையது சிங்களப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடைகள் என்னும் அடக்கு முறையை எதிர்த்து உற்பத்திப் போர்முனை. இதயம் எவ்வாறு குருதிச் சுற்றோட்டத்தை ஒழுங்கு படுத்தி நோய்களையும் பாதிப்புக்களையும் வென்றிட உடலுக்கு உதவுகின்றதோ அவ்வாறே தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தமிழீழம் எங்கும் உழைப்பைக் குருதியாய் ஓட வைத்து தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியின் அத்திவாரமாக திகழ வேண்டும்” என்றார்.

இவ் அமைப்பின் வளர்ச்சியால் இன்று தமிழீழத்தில் பல குடும்பங்கள் நிவாரணத்தை நம்பி வாழாமல் தாமாகச் சுயதொழில் மூலம் வாழும் நிலையைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம்

வைகாசி 6, 1994 வேளான் மன்னர்களுக்கு பரிசு அளித்து கௌரவித்து உரையாற்றிய தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன், ‘தமிழீழம் ஒரு செழிப்பான பூமி, வளங்கள் பல நிறைந்த தேசம்@ தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும் நில வளத்தையும் மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது. இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனம் கண்டு அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் திறமையான திட்டமிடுதலின் அடிப்படையில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

வேளாண்மையும் கைத்தொழிலுமே பொருண்மியக் கட்டுமானத்திற்கு அடித்தளமானது. இந்த இரு துறைகளையும் கட்டி வளர்ப்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த இலக்கில் ~ தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்~ ஆக்கபூர்வமான பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. இந்த முயற்சிகள் மேலும் மேலும் தீவிரம் பெற்று, விடுதலை பெறும் தமிழீழம் தங்கு நிலையற்றதாக தன் காலில் தரித்து நின்று வளர்ச்சி பெறக்கூடியதாக அமைய வேண்டும்” என்றார்.

பங்குனி 8 பெண்கள் தினம்

அனைத்துலக பெண்கள் தினமான பங்குனி 8, 1992 இல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில், ‘பெண் விடுதலை எனும் பொழுது அரச ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளாதார சுரண்டல் முறையிலிருந்தும் பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறிக்கிறோம்.

எனவே எமது இயக்கம் வடிவமைத்துள்ள பெண் விடுதலைப் போராட்டமானது தேச விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்ற என்ற குறிக்கோள்களை கொண்ட மும்முனை விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான போராட்டம் அல்ல.

இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டம். இந்தச் சிந்தாந்தப் போராட்டம் ஆண்களின் மனவுலக மாற்றத்தைக் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்” என்றார். தமிழீழ படைத்துறைப் பள்ளி

1991 புரட்டாதி 19ம் நாள் உருவாக்கப்பட்ட தமிழீழ படைத்துறைப் பள்ளியின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘தமிழீழப் படைத்துறைப் பள்ளி எனது முயற்சிகளில் ஒன்று.

எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ளவேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, புத்திசாலிகளாக, தேசப்பற்று உள்ளவர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்” என்று கேட்டிருந்தார்.

செஞ்சோலை சிறுவர் இல்லம்

[Image: sencholai1.jpg]

யுத்த சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் 1991 ஐப்பசி 23ம் நாள் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ‘வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்தச் செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம்.

இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய் மாறி ஒரு காலம் தமிழீழ தேசத்தின் சிந்தனைச் சோலையாகச் செழிப்புற வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள்” என்றார்.

[Image: sencholai2.jpg]

தமிழீழ காவற்துறை

[Image: police.jpg]

1991 கார்த்திகை 9ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ~தமிழீழ காவற்துறை~யினது செயற்பாடுகள் அதிகாரபூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக்காவற்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது ‘தமிழீழக் காவற்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள்.

பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களொடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள். சமூக விரோத குற்றச் செயல்கள் எவற்றுடனும் சம்பந்தப்படாதவர்களாகவும் தேசப்பற்று மிகுந்தவர்களாகவும் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். தமிழீழ காவற்துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து கூட்டில் நிறுத்துவது அதன் நோக்கமல்ல.

குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் இலட்சியமாகும்” என்றார்.

குறிப்பு- ~சிங்கள காவற்துறை~யினரால் யாழ்.பொது நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாளான ஆனி 1ம் நாள் தமிழீழ காவற்துறையினர் தமது பயிற்சிகளைத் தொடங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்

[Image: kalaipanpaadu10012004.jpg]

எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது கலையும் பண்பாடும் எமது தேசத்தின் ஆன்மா. இந்த நோக்கத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்கு 1992 ஆடி 15 இல் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அனுப்பிய செய்தியில், ‘எமது விடுதலைப் போராட்டத்தை மக்கள் மயமாக்கி, மக்கள் போராட்டமாக முழுமைப்படுத்தி மக்கள் அரங்கிலிருந்து ஒரு பலமான உறுதிமிக்க தேசிய எதிர்ப்பியக்கத்தைக் கட்டி எழுப்பும் பணி இன்றைய வரலாற்றுத் தேவையாக எழுந்திருக்கிறது. இந்தத் தேவையை பூர்த்தி செய்வதில் எமது, கலை இலக்கியப் படைப்பாளிகளின் பங்கு முக்கியமானது” என்று குறிப்பிட்டிருந்தார்.

புலிகளின் குரல் வானொலிச் சேவை

புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ‘எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.

தமிழீழ சட்டக் கல்லூரி

[Image: saddakaluri.jpg]

1993 தை 25ம் நாள் தமிழீழ சட்டக் கல்லூரியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையாறும் போது ‘தமிழீழத் தனியரசு என்ற இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்தத் தனியரசுக்கான அத்திவாரங்களை நாம் இப்போதிருந்தே கட்டியெழுப்ப வேண்டும்.

நீதித்துறை அரச நிர்வாக இயந்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு நிறுவனம் என்பதால் இப்பொழுதிருந்தே இத்துறை சம்பந்தமாக எமது போராளிகளாகிய உங்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக நிர்வாகத்தில் நீதித்துறை பிரதானமானது. நேர்மை, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கொண்டவர்களே நீதிபரிபாலனத்தைக் கையாள வேண்டும்.

முன்பு நீதிபரிபாலனத்திற்கென நாம் உருவாக்கிய இணக்க மன்றுகள் என்ற அமைப்பில் பல தவறுகள் நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்கள். இந்த இணக்க மன்றுகளால் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் மக்களின் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் இலக்காகின. சுயநலமற்ற முறையில், பாரபட்சமற்ற முறையில் நீதி வழுவாது தீர்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவேதான் ஒழுங்கும் கட்டுப்பாடுமுடைய எமது இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளைக் கொண்ட நீதி நிர்வாகமானது ஒரு வலுவான அரசிற்கும் கட்டுப்பாடுடைய சமூக அமைப்பிற்கும் ஆணிவேரானது. சமூக நீதி சரிவரப் பேணப்பட்டால்தான் சமுதாயம் ஒரு உன்னத நிலைக்கு வளரும்” என்றார்.

தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை

தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை நடத்திய தமிழீழப் பொதுக்கல்வித் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் 1993 மாசி 13 இல் வெளியிட்ட அறிக்கையில் ‘மனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. சமுதாய விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் தெரிவிக்கும,; கல்வி கற்கும் உரிமைக்கும் இடையில் நாம் என்றுமே முரண்பாட்டைக் கற்பிக்க முயல- வில்லை.

இரண்டுமே எமது சமூகத்தின் வாழ்வியக்கத்திற்கு இன்றியமை- யாதவை. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும். இன்று தமிழீழத்தில் கல்வித்துறை சீரழிந்த நிலையில் உள்ளது. தமிழரின் கல்வியைத் திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரசு புறக்கணித்து வருகிறது. எத்தனையோ நெருக்கடிகள் இடர்பாடுகளை எதிர்கொண்டு எமது மாணவர் சமூகம் கல்வியை கற்க வேண்டியிருக்கிறது.

தமது ஆர்வத்தினாலும் திறமையினாலும் கடும் உழைப்பினாலும் கல்வி கற்றுப் பொதுத் தேர்வுக்கு தயாரானாலும் உரிய காலத்தில் அவை நடைபெறுவதில்லை. தேர்வு நடைபெறும் காலங்களிலும் அரச படைகள் அமைதியைக் குலைத்து விடுகின்றன. இத்தனை தடைகளையும் தாண்டித்தான் எமது மாணவர்கள் தேர்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கணிதப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வுக்கு ஈடாக முதல் தடவையாக தமிழீழக்கல்வி மேம் பாட்டுப் பேரவை சிறப்புற நடாத்தி முடித்திருக்கிறது. இந்த முயற்சியை நான் மனப் பூர்வமாக பாராட்டுவதுடன் இத்தேர்வில் தோற்றிய தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

தமிழீழ நீதித்துறையின் நீதியாளர், சட்டவாளர்களின் சத்தியப் பிரமாணம்

[Image: saddakaluri.jpg]

1993 ஆவணி 19 இல் தமிழீழ நீதித்துறையின் நீதியாளர் சட்டவாளர் ஆகியோரின் சத்தியப் பிரமாண வைபவத்தில் ஆற்றிய சொற்பொழிவில் ‘போராளிகள் நீதியாளர்களாகவும் சட்டவாளர்களாகவும் பொறுப்பை ஏற்றால் தமது பிரச்சினைகளை நேர்மையாக அணுகி சரியான முறையில் நீதி வழங்குவார்கள் என எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

போராளிகள் ஒரு உன்னத குறிக்கோளுக்காக தமது உயிரையும் துறக்கத் தயாராகவுள்ள இலட்சியவாதிகள் என்பதை பொதுமக்கள் அறிவார்கள். எனவே போராளிகளாகிய நீங்கள் நீதி நிர்வாகத்தை பொறுப்பேற்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் ;;நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயவாற்றுவீர்கள் என நம்புகிறேன். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள்.

இந்த உண்மையின் அடிப்படையில் நீங்கள் உலக அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முயல வேண்டும். அனுபவம் மூலமாகவே நீங்கள் நிறைந்த அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து அவர்களுக்கு நீதி வழங்குவதை உங்கள் கடமையாகக் கொள்ளவேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுவதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எப்போதும் நேர்மை தவறாது சத்தியத்தின் வழியில் நீங்களும் உங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கான உறுதியும் துணிவும் உங்களிடம் இருக்க வேண்டும்” என்றார்.

காந்தரூபன் அறிவுச்சோலை

1993 காhத்திகை 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அவர் ஆற்றிய உரையில் ‘எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள். எமது போராளிகள் அனைவருமே இவர்களது சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணைபிரியாத அங்கமாக இணைந்து உள்ளனர்.

தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டுவளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச் சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேரூ ஈடுபடுகின்றோம். ஆனால் இத்தகைய சமூக சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்க வேண்டும்” என்று கூறினார்.

குறிப்பு- பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த காந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்று வீரச்சாவை தழுவிக் கொண்டார்

இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ‘யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப் புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப் போல், தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறைவேற்றும் முகமாக காந்தரூபன் அறிவுச்சோலை எனப் பெயரிடப்பட்டது.
Visit this user's website Find all posts by this user
Quote this message in a reply
Post Reply 


Forum Jump:


User(s) browsing this thread: 1 Guest(s)